விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா  ஜெயந்தி விழாவை முன்னிட்டு 250 பெண்கள் கலந்துகொண்ட மாவிளக்கு ஊர்வலம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முதல்முறையாக  விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  விஸ்வகர்மா சமுதாயத்துக்கு உட்பட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு  விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்ட பின் தீபாதாரணைகள் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து சிறுமிகள் உட்பட 250 பெண்கள் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த மாவிளக்கு ஊர்வலமானது தாலுகா அலுவலகம்,  பேருந்து நிலையம், மதுரை சாலை மற்றும் நான்கு ராத வீதி வழியாக நையாண்டி மேளம் மற்றும் வானவேடிக்கையுடனும் மாவிளக்கு ஊர்வலம் காவல்துறையின் பாதுகாப்புடன் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  விஸ்வகர்மா திரு உருவப்படத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.