விளாத்திகுளம் அருகே சேலையில் ஊஞ்சலாடிய 14 வயது சிறுமி உயிரிழப்பு ?


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துராஜ் என்பவரின் மகள் சிறுமி ஹேமாமாலினி (14),இவர் வீட்டில் அக்காள் மகள் 2 வயது குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த சேலைத்தொட்டிலில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தபோது சேலைகழுத்தில் இறுக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுமி உயிரிழந்த நேரத்தில் வீட்டில் உள்ளோர், நடைபெறவுள்ள ஊர் திருவிழாவிற்கு கும்மி அடிக்கும் பயிற்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.