விளாத்திகுளத்தில், "இயற்கை வேளாண்மை போராளி நம்மாழ்வாரின் 12-வது ஆண்டு நினைவு தினம்" அனுசரிப்பு!
தமிழகத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி செய்து வந்த விவசாயத்திற்கு மாற்றாக பெரும் புரட்சியாக இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய "இயற்கை வேளாண்மை போராளி" டாக்டர். கோ. நம்மாழ்வாரின் 12-வது நினைவு தினம் பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக அனுசரிக்கப்பட்டு அவரின் பெருமைகள் பறைசாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஏர் உழவன் விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான இயற்கை விவசாயிகள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இங்கு பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் தமிழக ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் வடக்கு மாவட்ட தலைவர் முனியசாமி, விருதுநகர் மாவட்ட தலைவர் ராமர், சிறப்பு
அழைப்பாளர்கள் முனைவர் சம்பத்குமார், இயற்கை கோமாளி கருப்பசாமி, சடையாண்டி, கணேசன், மகாராஜன், செல்லத்துரை, காளிமுத்துராஜ் உள்ளிட்ட இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கோ. நம்மாழ்வார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.