எட்டயபுரம் அருகே அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சிக்காக அழைத்துவரப்பட்ட 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மணி நேரமாக காத்திருக்கும் அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் அமைந்துள்ள மேம்படுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா இன்று தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க இருப்பதால் இப்பகுதியைச் சார்ந்த கட்சியினர் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் வேலை பணியாளர்களை 2 மணி நேரத்திற்கு முன்பாகவே கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்துள்ளனர். இவ்வாறு அமைச்சரின் நிகழ்ச்சிக்காக அழைத்துவரப்பட்ட 100 நாள் வேலைப் பணியாளர்கள்... "நாங்கள் காலையிலேயே வேலைக்கு சென்று போட்டோ எடுத்து விட்டு இங்க வந்து விட்டோம் மறுபடியும் போக வேண்டும்.. அவ்வளவு தூரம் நடந்தே தான் போக வேண்டும்..." என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10:20 மணிக்கு இங்கு வருகை தர இருந்த அமைச்சர் கீதாஜீவன் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் வராத காரணத்தினால் தொடர்ந்து இந்த 100 நாள் வேலை பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...