விளாத்திகுளத்தில் 100% பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்!     அண்ணா தொழிற்சங்கம் மற்றும் CITU கூட்டமைப்பைச் சேர்ந்த போக்குவரத்து தொழிற்சங்கங்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஏற்கனவே இந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தபடி, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வரும் சூழல் நடைபெறுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை பொருத்தமட்டில் விளாத்திகுளம் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பெருநகரங்களுங்கு செல்லும் பேருந்துகளும், அதே போன்று கிராமப்புற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு 100% அரசு பேருந்து போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது. அண்ணா, சிஐடியு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வராத சூழ்நிலையிலும் அவர்களுக்கு மாற்றாக தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மூலம் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விளாத்திகுளம் போக்குவரத்து பணிமனையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி, இருக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை விட அரசு மற்றும் தற்காலிக டிரைவர்கள், கண்டெக்டர்கள் இருப்பு எண்ணிக்கை அதிகப்படியாகவே உள்ளதால் இங்கு அரசு பேருந்து போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...