ஒரு கூட்டணியை கூட தமிழ்நாட்டில் வைத்து முடிக்க முடியாத சூழ்நிலையில் அதிமுக,டெல்லியில் சென்று கூட்டணியை முடிக்கும் நிலையில் உள்ளது !


ஜெயலலிதா மோடியா? லேடியா? என்று கேட்ட நிலையில் தற்போது எங்களுக்கு எல்லாம் “ மோடி தான் டாடி” என்று கூறுகின்றனர்.


வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன்!


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட மார்கண்டயேனுக்கு அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து புதூரில் உள்ள சட்ட மாமேதர் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து புதூர் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளரும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான மார்கண்டயேன் பேசுகையில்...

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் தலைவர்களை பார்த்து, மாபெரும் தலைவர்கள் என்று சொல்வார்கள், ஆனால் ஒரு கூட்டணியை கூட அண்ணா திமுக கட்சியால் முடிக்க முடியவில்லை, டெல்லியில் வைத்து முடிக்க கூடிய அளவில் தான் பயந்து பயப்பட வச்சிட்டாங்க.

அந்தம்மா மோடியா?  லேடியா? னு கேட்டுச்சு, இங்கே எல்லாம் பார்த்தா மோடி தான் எங்க " டாடி" ங்க னு, அண்ணா திமுகவின் நிலைமை இப்படி ஆகிவிட்டது, அதனால்தான் சொல்கிறேன் அண்ணா திமுக 50 துண்டுகளாக உடைந்து போய் உள்ளது,திமுக ஒரே சக்தியாக இருக்கிறது.

திமுக கூட்டணி கட்சிக்காரர்கள் ஒரே உணர்வோடு இருக்கிறார்கள், இங்கு இருக்கக்கூடிய வாக்காளர் பெருமக்களை அனைவரையும் அரவணைக்கிறோம்.


எடப்பாடி 2000 ரூபாய் தருகிறோம் என்று சொல்கிறார், ஏற்கனவே நாம் 2000 ரூபாய் கொடுத்து விட்டோம். 1000 ரூபாய் ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டோம்,மே மாதத்திற்கு உங்களின் அக்கவுண்டில் 2000 ரூபாய் போட்டு விட்டோம்.அதிமுகவினர் சொல்லத்தான் செய்வார்கள், நாம் செய்து விடுவோம் என்று திமுக வேட்பாளர் மார்கண்டையேன் பேசினார்.

நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரக் கூட்டத்தில் திமுக புதூர் நகர செயலாளர் வெற்றிவேலன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.