ஆழ்கடலில் விழுந்த விளாத்திகுளம் பகுதி மீனவர் அண்ணாதுரையை உடனடியாக மீட்க மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த கனிமொழி MP !




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி சாலமோன் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (30) இவர் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சின் கடற்கரைப் பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக விசைப்படையில் சென்ற போது,குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நிலை தடுமாறி திடீரென விசை படகிலிருந்து தவறி  விழுந்ததாகவும், அவரை தற்போது வரை விசைப்படையின்   உரிமையாளர் தேடி வருவதாகவும் கூறி வருகின்றனர். கடலில் விழுந்த அண்ணாதுரையை உடனடியாக கண்டுபிடித்து தரக் கூறி அண்ணா துறையினர் குடும்பத்தினர், மும்பையில் உள்ள கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கும் மற்றும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி இன்று (27/11/2024) டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி சாலமோன் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் அண்ணாதுரை கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளார். தற்போது குஜராத் மாநிலம் போர் பந்தரிலிருந்து 100 நாட்டிகல் மைல் தொலைவில் அண்ணாதுரை கடலில் தவறி விழுந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவரை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தியும், லட்சத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று, கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்துள்ளார். 

அதேபோல் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர  காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் திரு. அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. @rajnathsingh அவர்களைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.