விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்!


எட்டையாபுரத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் திட்டங்குளம் - கழுகாசலபுரம் கிராமம் அருகே கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய விளாத்திகுளம் கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் திரு.நாகரெட்டியார் என்பவரது மகன் நாகராஜன் என்ற இளைஞரை அவ்வழியாக சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


மேலும் மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.