தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில், நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியை தொடர்ந்து கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டியில் தேங்கியுள்ள நீர், குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் கழிவுநீர் உள்ளிட்டவற்றில் இருந்து கொசுக்கள் பரவும் என்பதால் அதனை உடனுக்குடன் சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், டெங்கு வராமல் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கிராம பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, கிராமத்தில் உள்ள கால்வாய்கள், குப்பை தொட்டிகளை முறையாக பராமரித்து கொசுக்கள் பரவாத வண்ணம் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் பூச்சிகள் வல்லுநர் கோவிந்தகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் என அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டு டெங்கு வராமல் தடுக்க கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ்பாண்டியன், சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், பாலகண்ணன், கண்ணன், தினேஷ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.