விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் அனுமதியின்றி கட்சி கொடிகம்பம் நடுவதற்கு ஊர்வலமாக வந்த பாஜகவினர் 17பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் மேலரத வீதியில் இருந்து பா.ஜ.க ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமையில், ஒன்றிய பொதுச்செயலாளர் ஹரிஹரசுதன், நெசவாளரணி மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலையில், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாலையில் கோவில்பட்டி-தூத்துக்குடி சாலையில் பா.ஜ.க கொடியேற்றுவதற்காக ஊர்வலமாக வந்தனர். விளாத்திகுளம் டிஸ்பி ஜெயச்சந்திரன், எட்டயபுரம் உதவி ஆய்வாளர் வசந்தி மற்றும் காவல்துறையினர் தூத்துக்குடி சாலையிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி புதிதாக கட்சி கொடி நடுவதற்கு அனுமதியில்லை என கூறினர். ஆனாலும், பா.ஜ.கவினர் கட்சி கொடி கம்பம் நடுவோம் என கூறியதை தொடர்ந்து, 17 பேரை எட்டயபுரம் போலீஸார் கைது செய்து தூத்துக்குடி சாலையில் உள்ள தனியார் சமுதாய திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தமிழ்நாடு
பாஜகவினர் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
அடுத்த
"விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு" நிகழ்ச்சி நடைபெற்றது.