வி.புதூர் பேரூராட்சி மன்ற தலைவி மீது பாய்ந்தது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் : துப்புரவு பணியாளரை சாதியைக்கூறி திட்டியதாக புகார் : வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்யாதது ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூர் பேரூராட்சியில் GREEN TRUST என்ற நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 27 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளப் பணம் போதுமானதாக இல்லை எனக் கூறி தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவி மற்றும் செயல் அலுவலரிடம் சம்பளத்தை உயர்த்தி தரும்படியும் அல்லது தங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இதனை ஏற்க மறுத்தது மட்டுமின்றி இந்த கோரிக்கையை கொண்டு சென்ற நாளிலிருந்து, பேரூராட்சி மன்ற தலைவியின் தூண்டுதலின் பேரில், அலுவலகத்தில் GREEN TRUST நிறுவனத்தின் ஒப்பந்த மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் அழகர்சாமி என்பவர் இங்கு துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் அதிக நேரம் வேலை வாங்குவது, ஒருமையில் பேசி திட்டுவது என்பதை தொடர்ச்சியாக கொண்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி வி.புதூர் பேரூராட்சி மன்றத் தலைவி வனிதாவின் தோட்டத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர் சாமி கட்டாயப்படுத்தியதாகவும், அதனை செய்ய மறுத்த துப்புரவு பணியாளர் கருப்பசாமி என்பவரை பேரூராட்சி மன்ற தலைவி வனிதா கருப்பசாமியின் ஜாதியை கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக துப்புரவு பணியாளர் கருப்பசாமியின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரியின் பேரில், இதனை விசாரித்த புதூர் காவல் நிலைய போலீசார் பேரூராட்சி மன்ற தலைவி வனிதா மற்றும் GREEN TRUST ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர்சாமி ஆகிய இருவர் மீது IPC 294(b), SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(r) மற்றும் 3(1)(s) என 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.(மேலும் பேரூராட்சி மன்ற தலைவி வனிதா மற்றும் ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர்சாமி ஆகிய இருவரும் தன்னை அவதூறாக பேசு திட்டியதன் காரணமாக மன உளைச்சலில் துப்புரவு பணியாளர் கருப்பசாமி எறும்பு சாக்பீஸை தண்ணீரில் கரைத்து குடித்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்தே தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட சக பணியாளர்கள் அவரை முதலுதவிசிக்காக புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து தற்போது துப்புரவு பணியாளர் கருப்பசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
நேற்றுமுன்தினமே பேரூராட்சி மன்றத் தலைவி வனிதா மற்றும் ஒப்பந்தம் மேற்பார்வையாளர் அழகர்சாமி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறை தற்போது வரை அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சாதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைவி வனிதா, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தற்போது வரை கைது செய்யப்படாத நிலையில், வி.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று(22.09.2023) நடைபெற்ற 17 கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி பேரூராட்சி தலைவிக்கு புதூர் போலீசாரின் ஆதரவும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது என்றே சொல்லலாம்...
தனக்கு காவல்துறை மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் பேராட்சி தலைவி மற்றும் ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதூர் காவல் நிலையத்தை நாடிய துப்புரவு பணியாளர் கருப்பசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்குமா? என்பதை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிகார மமதையில் செயல்பட்டு வந்த பேரூராட்சி மன்ற தலைவி வனிதா மீதும், ஒப்பந்த மேற்பார்வையாளர் அழகர்சாமி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபது துப்புரவு பணியாளர்கள் உட்பட பலரது எதிர்பார்ப்பாக உள்ளது....
தமிழ்நாடு
பேரூராட்சி மன்ற தலைவி மீது பாய்ந்தது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம்-வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்யாதது ஏன்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈராச்சி கிராம ஆதிதிராவிட மக்கள்!
அடுத்த
புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026