நாகப்பட்டினம்_ இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடி கானொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் -மத்திய,மாநில அமைச்சர்கள் பங்கேற்பு!
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை துறைமுகத்திற்கு புதிதாக கப்பல் போக்குவரத்து இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக ராமச்சந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,மற்றும் ஏ.வ.வேலு,கலந்து கொண்டு முன்னிலை வகித்து கொடியசைத்து கப்பல் சேவையை தொடக்கி வைத்தார்.
முன்னதாக நாகப்பட்டினம் துறைமுகம் அதிகாலை முதல் விழாக்கோலம் பூண்டு பரபரப்புடன் காணப்பட்டது.மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நாகப்பட்டினம் காவல்துறையினர், கஷ்ட்டம்ஸ் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.துரைமுகத்திற்கு வருவோர் ஆனைவரும் கடும் பரிசோதனைக்குப்பிறகு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கப்பலில் பயணம் செய்ய முதல் பயணக்குழுவில் 50 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.கப்பல் போக்குவரத்து துவக்க விழா சிறப்பு சலுகையாக ஒருநபருக்கு ரூ.2,700 கட்டணம் செலுத்தினர். வழக்கமாக ஒருநபருக்கு ரூ.7,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கட்டணம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் வேலு பேசுகையில் இலங்கை செல்வோருக்கு 50 சதவீதம் கட்டண சலுகையாக மத்திய அரசு மானியம் வழங்கிட வேண்டும் என்று விழா மேடையில் கோரிக்கை விடுத்தார்.கப்பல் பிரயாணத்திற்கு வருகை தந்த முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரையும் பலத்த பாதுகாப்புடன் சோதனைக்கு உட்படுத்தி,கஸ்டம்ஸ் சோதனைக்கு பிறகு கப்பலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி,துவக்க உரையற்றினார். அப்போது நாகப்பட்டினம் துறைமுகத்தின் பழம்பெருமையை நினைவு கூர்ந்தார். பாரதியார் பாடல் ,மற்றும் சங்க இலக்கிய களை மேர்க்கொல் காட்டி பேசினார். புதிய கப்பல் போக்குவரத்து தொடங்கியிருப்பதால் இலங்கை இந்தியா நட்புணர்வு,பொருளாதாரம் மேம்படும்.விரைவில் ராமேஸ்வரம்_ தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இளங்கை அமைச்சர் சில்வா ஆக்கியோர் பேசினர். நிகழ்ச்சியின் நிறைவாக . மேடையில் இருப்பவர் அனைவரும் பச்சைக்கொடி காட்டியவுடன்,மிகுந்த கரவொலியுடன் ஆரவாரத்துடன் கப்பல் தனது முதல் பயணத்தை இலங்கைக்கு தொடங்கியது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மத்திய மாநில கப்பல் போக்க௭வரத்து துறை அலுவலர்கள், அனத்துக்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு
நாகப்பட்டினம்_ இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கானொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் 2025 கிலோ காய்கறிகளை வைத்து சிறப்பு பூஜைகள்!
அடுத்த
புரட்டாசி மாத கொடை விழாவை முன்னிட்டு சுடலைமாடனுக்கு 1001 கிலோ பன்றி கறி படையல்!