தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியம், முத்துசாமிபுரம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து பள்ளியில் வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தவமணி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா முத்துராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர்கள் முருகன், கந்தவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.