விளாத்திகுளம் அருகே K. சண்முகபுரம் கிராமத்தில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிடம் திறப்பு விழா!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.சண்முகபுரம் ஊராட்சியில் 

23.57-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக  கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.


மேலும் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், கே.சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாஸ்கர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி, அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் கிளைச் செயலாளர்கள் சங்கர், பாலமுருகன், ஜெயக்குமார், பிரபாகரன்  

எப்போதும்வென்றான்  ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா   ஒன்றிய குழு உறுப்பினர்கள் கரியம்மாள் அழகு, வெள்ளைச்சாமி

மாவட்ட பிரதிநிதி தளவைராஜா தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் வேடநத்தம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த்   தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன்  குறுக்குச்சாலை கிளைச்செயலாளர் லட்சுமணன்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.