விளாத்திகுளம் அருகே புரட்டாசி மாத
கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் -
சிரிப்பாய்ந்தா 66 ஜோடி மாடுகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள குளத்தூர் ஸ்ரீ வெட்டூர் பெருமாள் சுவாமி திருக்கோவில் புரட்டாசி மாத உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது,
சிறிய
மாடுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் ,பூஞ்சிட்டு 6கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யபட்டு
போட்டியானது இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 66 ஜோடி மாடுகள்
போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின்
உரிமையாளர், மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி
சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாபெரும்
மாட்டு வண்டிகள் பந்தயத்தை ஏராளமான மாட்டு வண்டி ரசிகர்கள் சாலையின் இருபுறமும்
நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.