கமுதி அருகே வாழவந்த அம்மன் சாத்தார் உடையார் ஐயனார் ஆலய பொங்கல் புரவி எடுப்பு விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற காளைகள்! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதலியார் புதுக்குளம் கிராமத்தில் ஸ்ரீ வாழவந்த அம்மன் சாத்தார் உடையார் அய்யனார் ஆலய பொங்கல் புரவி எடுப்பு முளைப்பாரி திருவிழாவை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது,இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து சென்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன,போட்டியானது கமுதி to சாயல்குடி சாலையில் எல்கை நிர்ணயிக்கப்பட்டு பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு வகைகளாக  பிரிக்கப்பட்டு 8 ,6கிலோ மீட்டர் எல்கை நிர்ணயிக்கப்பட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.இந்த மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று பார்வையாளர்கள் ஏராளமானவர் கண்டு ரசித்து சென்றனர். நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை முதலியார் புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கொடியசித்து துவக்கி வைத்ததார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.