சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினம் - விளாத்திகுளம்  அதிமுக சார்பில் மரியாதை!



தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெல்கட்டும் செவல் பச்சேரி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த செல்லையா பகடை கருப்பாயி தம்பதியினரின் 8-வது குழந்தையாக பிறந்தவர் ஒண்டிவீரன், இவரது இயற்பெயர் முத்துவீரன் ஆனால் எதிரிகளை தன்னந்தனியாக எதிர்கொண்டு வீழ்த்தும் வல்லமை கொண்டதால், அவருக்கு ஒண்டிவீரன் என்ற பெயர் ஏற்பட்டது, 18-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற மன்னனாக இருந்த பூலித்தேவனின் நம்பிக்கை கூறிய தளபதியாக இருந்த ஒண்டிவீரன் பூலித்தேவனின் போர்வாள் என்று போற்றப்பட்டார்.



1755 முதல் ஆற்காடு நவாப் இடமிருந்து நெல்லை சீமையில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர், இதனை எதிர்த்து வீர முழக்கமிட்ட  ஒண்டிவீரன் ஆற்காடு நவாப் படையையும், தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனி படையையும் நெற்கட்டான் செவ்வயலில் போரிட்டு விரட்டி அடித்தார்.


1757 ம் ஆண்டு முதல்1759-ம் ஆண்டு வரை ஆங்கிலேய கிழக்கிந்திய ஆதரவாளர்களை எதிர்த்து கங்கைகொண்டான், ஆழ்வார்குறிச்சி, நெற்கட்டான் செவ்வயல், ஊத்துமலை,சுரண்டை, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போர்களில் ஒண்டிவீரன் தலைமையிலான படையினர் எதிரிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடினர்.


ஒண்டியாக சென்று சாதித்த ஒண்டிவீரன் புகழைப் போற்றும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், மத்திய அரசு சார்பில் நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது.அவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர் அவரது நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில்,அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகரச்செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி நிர்வாகி பிரியா,சாந்தி உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.