வெறும் ஜல்லியை மட்டும் கொட்டி வைத்து ஒரு வருஷத்திற்கு மேலாகி விட்டது - சாலை பணிகள் முடிந்தபாடு இல்லை - எட்டயபுரம் அருகே அவதிப்பட்டு வரும் மக்கள்!



பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை - பணிகள் முடிவடையாத நிலையில் பணிகள் முடிவுற்றதாக ஃபோர்டு வைத்தால் பரபரப்பு!



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது கீழ்நாட்டுக்குறிச்சி கிராமம். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கரிமூட்ட தொழில் இப்பகுதி மக்களின் முக்கியத் தொழிலாளாக இருந்து வருகிறது. இது கிராமத்தில் இருந்து தாப்பாத்திக்கு செல்லும் சாலை தான் கிராம மக்களின் பயணத்திற்கு முக்கிய சாலலையாக இருந்து வருகிறது. இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டதால் இதனை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த ஆண்டு கீழ்நாட்டுக்குறிச்சி வழியாக செல்லும் அயன்ராஜாபட்டி - தாப்பாத்தி இடையிலான 6 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை 4 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ்  பணிகள் தொடங்கப்பட்டன. மண் மற்றும் ஜல்லி மட்டும் சாலையில் விரித்த நிலையில் மேற்கொண்டு பணிகள் தற்போது வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி  இந்தாண்டு ஜூலை மாதம் நிறைவு பெற்றதாக விளம்பர பலகை மட்டும் வைத்திருப்பதாக  அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுடைய கிராமத்தில் 5வரை தான் பள்ளி உள்ளது. மேற்படிப்புக்கு தங்களது குழந்தைகள் எட்டையாபுரம், வெம்பூர் , பந்தல்குடியில் செயல்படும் பள்ளிகளில் தான் படித்து வருகின்றனர். தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதியும் இல்லை என்பதால் நடந்து தாப்பாத்திக்கு சென்று தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை. பணியில் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் சாலை போடப்படவில்லை என்பதால், ஜல்லி மீது நடந்து தான் குழந்தைகள் செல்ல வேண்டி இருக்கு. இதனால் சில நேரங்கள் பேருந்து விடும் சூழலையும் நிலவி வருகிறது. மேலும் முதியவர்கள் பெண்கள் ஜல்லியில் நடந்து செல்ல முடியாது என்பதால் அவசரத்திற்கு ரூ.200 முதல் 500 வரை ஆட்டோவிற்கு பணம் கொடுத்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும். ஏதாவது அவசரம் என்றால் வாகனங்கள் விரைந்து  செல்ல முடியாத நிலை இருக்கிறது, அதுமட்டுமின்றி பலரும் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.பலமுறை இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை வரும். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாப்பாத்தி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தான் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 



பணியில் தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை போடவில்லை என்பதால் சாலையில் கொட்டி வைத்துள்ள ஜல்லியினால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். பணிகள் முடிவடையாமல், முடிவற்றதாக வைக்கப்பட்ட ஃபோர்டு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.