எட்டையாபுரத்தில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும், மாநில நிதி பகிர்வு ஆணைய நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் சிமேன்ட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்,தொடர்ந்து பேரூராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட உமறுப்புலவர் தெருவில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்பீட்டில் சிமேன்ட்சாலை அமைக்கும் பணி என ரூ.1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட திட்டப்பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்தும், பூமிபூஜை செய்தும் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன்,பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.