கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி!
ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, அதேபோல் இந்த மாத 41வது அன்னதான நிகழ்ச்சி வேலாயுதபுரம் அருள்மிகு ஸ்ரீ நித்திய கல்யாண விநாயகர் கோவிலில் வைத்து நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு.. சரவணா ஸ்டோர்ஸ். உரிமையாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.. முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் லவ ராஜா வரவேற்றார்.. சங்கரநாராயணன் பூக்கடை . செல்வம், நகர கூட்டுறவு வங்கி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. கோவில்பட்டி திட்டன்குளம் .கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி. அவர்கள் பொங்கல் பிரசாதம் வழங்கினார்கள்.. அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன்.அவர்கள் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக. தொழிலதிபர்கள். சீனிவாசா பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஜவகர்.அருண் பேக்கரி மாடசாமி.ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்.. ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன். தலைவர் ஜெயக்கொடி. செயலாளர் ஜோதி காமாட்சி.பொருளாளர் கார்த்திகேயன். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள். நடராஜன். பாண்டியன். தங்கராஜ்.முத்து மாரியப்பன்.ஆசிரியர் ஜீவானந்தம். பூக்கடை சுந்தரமூர்த்தி.பசுமை இயக்கம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.கணபதி ஜுவல்லர்ஸ். தொழிலதிபர் கதிரேசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.