பைக் சரி பண்ண பணம் தர மாட்டீங்களா   தந்தையை கீழே தள்ளி தாயை தாக்க முயன்ற மகன் - நீ ஒழிந்தால் தான்  எங்களுக்கு நிம்மதி - ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்த தந்தை - எட்டயபுரம் அருகே பரிதாபம் .




தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர்  பாலச்சந்திரன்(51). இவருக்கு திருமணமாகி  திருகேதீஸ்வரி (47)கனகராஜ், (22) பாலபாரதி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பாலச்சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செந்தூர்புரம் முல்லை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். மூத்த மகன் கனகராஜ் மட்டும் படர்ந்தபுளியில் தனது தாத்தா பாண்டி மற்றும் பாட்டி மாடத்தியம்மளுடன் வசித்து வந்துள்ளார். 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள கனகராஜ் தொடக்கத்தில் தனது தந்தை தாய் மற்றும் சகோதரருடன் வசித்து இருந்த நிலையில், கஞ்சா  உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி அடிக்கடி சண்டை போட்டதால், அங்கிருந்து படர்ந்தபுளி கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.




கடந்த 13 ஆம் தேதி தனது பைக்கை சரி பண்ண வேண்டும் என்று கூறி அவருடைய பாட்டியிடம் இருந்து  தங்க கம்மல் மற்றும் மோதிரத்தை கனகராஜ் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாடத்தி அம்மாள் தனது மகன் பாலச்சந்திரனுக்கு போன் பண்ணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து  பாலச்சந்திரன் தனது மகன் கனகராஜ் தொடர்பு கொண்டு கேட்டபோது  ரூ. 70000 பணம் வேண்டும் கேட்டுள்ளார். தன்னிடம் தற்போது  ரூ. 2500 பணம் தான் இருக்கிறது. இதை தற்போது ஜி பேயில் அனுப்பி வைக்கிறேன். பின்னர் மீது தருவதாக கூறி அந்த பணத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் கனகராஜ் தனது பாட்டியிடம் தங்க மோதிரம் மற்றும் கமலை கொடுத்துள்ளார்.



இந்த சூழ்நிலையில் 14 ஆம் தேதி  கனகராஜ் தனது பெற்றோருக்கு போன் பண்ணி எனக்கு பைக் சரி பண்ணி தாங்க இல்லையென்றால் பாட்டியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மாடத்தி அம்மாள் போன் செய்து   போதை பழக்கத்திற்கு  அடிமையாகி   இங்கு இருப்பவர்களிடம் தொடர்ந்து தகராறு ஈடுபட்டு வருவதாகவும் கனகராஜை கூப்பிட்டு செல்லும்படி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து பாலச்சந்திரன் தனது மனைவியுடன் அன்று இரவே கிளம்பி படர்ந்தபுளி கிராமத்திற்கு வந்துள்ளார்.



நேற்று மாலை வரை கனகராஜ் வீட்டிற்கு வராத நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்த கனகராஜ் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு சண்டை போட்டு உள்ளார். பின்னர் கனகராஜ் வெளியே சென்ற நிலையில்  அவரது பெற்றோர் மற்றும் பாட்டி வீட்டில் தூங்கி உள்ளனர


 பின்னர் நள்ளிரவில் 12.15மணிக்கு வீட்டிற்கு வந்த கனகராஜ், பைக்கை சரி பண்ண பணம் கேட்டால் தராமல் தூங்கிக்கிட்டு இருக்கீங்களா  என்று கூறியவாறு தனது தந்தையை கனகராஜ் தாக்க முயன்றது மட்டுமின்றி, பாலச்சந்திரனை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்பாவை ஏன் கீழே தள்ளி விட்டாய் என்று அவர் தாய்க்கு கேட்க, அவரையும் கனகராஜ் தாக்க முயன்றுள்ளார்.



இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன்  அருகில் இருந்த கம்பை எடுத்து உன் தொந்தரவு தாங்க முடியல எங்களால நிம்மதியா வாழ முடியல நீ ஒழுங்கா தான் எங்களுக்கு நிம்மதி என்று சொல்லிக் கொண்டே  கனகராஜ் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இருந்தபோதிலும் கனகராஜ் திரும்பவும் தந்தையை தாக்குவதற்கு ஓடி வந்துள்ளார். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் தந்தை பாலச்சந்திரன் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து அவரது மகன் கனகராஜ்  மீது  போட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும்  எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பாற்றி  உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கனகராஜ் மீது எட்டயபுரம் மற்றும் நாலட்டின் புதூர் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.