விளாத்திகுளம் அருகே புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதூர் பஜார் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பொன்னையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து புதூர் காவல் நிலைய போலீசார் 49 ஆயிரம் மதிப்புள்ள 66 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
News
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்டாசி மாத கொடை விழாவை முன்னிட்டு சுடலைமாடனுக்கு 1001 கிலோ பன்றி கறி படையல்!
அடுத்த
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026