தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் 13 வயது மகன் மனோஜ் குமார். இவர் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள "முத்துப்பூங்காவிற்கு" விளையாடச் சென்றுள்ளார். அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கு கம்பத்தை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது மனோஜ் குமார் மின்விளக்கு கம்பத்தை தொட்டதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் மனோஜ் குமார் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல்துறையினர் உடனடியாக பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த மற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை பத்திரமாக பூங்காவில் இருந்து வெளியேறச் செய்து விளாத்திகுளம் மின்வாரிய பணியாளர்களை வரவழைத்து அந்த மின்விளக்கு கம்பத்தை சோதனையிட்டதில் கம்பத்தின் மீது உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விளாத்திகுளம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த "முத்து பூங்காவில்" முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமும் தான் 13 வயது சிறுவன் மனோஜ் குமாரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகளவில் சிறுவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் மீதும் ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த மனோஜ் குமாரின் குடும்பத்தினரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்...
News
13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி : பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகொலை.
அடுத்த
வைப்பாற்றின் கரையை சரி செய்யாததால் பள்ளி மாணவர்கள் சிரமம் : 25 கி.மீ தூரம் சுற்றி பள்ளிக்குச் செல்வதால், உடனடியாக சரி செய்ய கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026