கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் - உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் !



சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும், அதன் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில்  உலக சிட்டுக்குருவிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிழக்கு  காவல் நிலையம் சுற்றுச்சுவரில் பறவைகளுக்கு மண் பாத்திரங்களில் நவதானியங்கள், தண்ணீர் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மண் பாத்திரங்களில் நவதானியங்கள், தண்ணீர் ஊற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் போலீசார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.