கோவில்பட்டியில் குக்கர் வெடித்து பெண் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி நகர் பகுதி குருசாமி என்பவரின் மனைவி சாந்தி (45), இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்து சிதறியதில், சாந்தி படுகாயம் அடைந்தார். இதனை அருகில் இருந்தவர்கள் சாந்தியை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சமையல் செய்யும்போது குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.