தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி திருநெல்வேலி சாலை தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே மீன் கடை நடத்தி வந்துள்ளார், இரவில்வெள்ளத்துரை மீன்கடையில் தூங்குவது வழக்கமாக வைத்துள்ளார், வெள்ளத்துரைக்கு துணையாக கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்த சாமி என்ற மகாராஜன் (56) என்பவர் இரவில் அவருடன் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இருவரும் வழக்கம்போல் 06-06-2024 வியாழக்கிழமை இரவு மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் சாமி என்ற மகாராஜன் ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார்,இரு உடல்களையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் மோப்பநாய் ஓடியது, ஆனால் அதில் எந்த ஒரு தடயங்களும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது, மற்றும் தடையவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட வெள்ளத்துரைக்கு சில நாட்களுக்கு முன்பு திருவிழாவில் ஏற்பட்டமோதல் காரணமா? அல்லது தொழில் போட்டி காரணமா? என கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் திணறி வருகின்றனர்,மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமராவை கொலையாளிகள் அடித்து உடைத்து கையோடு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது...