கர்நாடக மாநிலம்
பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் கொரியர் வேன் மூலமாக கோவில்பட்டிக்கு,
தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்த
இருப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
அடிப்படையில், போலீசார் தீவிர வாகன
சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த கொரியர் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இரண்டு மூட்டைகளில் அரசால் தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்து பார்சல் யாருக்கு வந்தது என்று
விசாரித்த போது, விசாரணையில்
கோவில்பட்டி கணேஷ் நகர் ஜேசுதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில்
இருந்து கொரியர் பார்சல் சர்வீஸ் மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்
பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், வேனில் கடத்திவரப்பட்ட
130 கிலோ புகையிலைப்
பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Kovilpatti
கொரியர் வேனில் புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
6 அடி முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறும் பூசாரி!
அடுத்த
தனியங்கோட்டம் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது - சீறிப்பாய்ந்த 37 ஜோடி மாடுகள்!
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026