கோவில்பட்டி அருகே 10 பவுன் தங்க நகை திருடிய 3 பேர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதிதேவர் என்பவரின் மனைவி சுப்புத்தாய் (70) என்பவரது வீட்டில் கடந்த வாரம் 10 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 45 ஆயிரம் பணம் திருடு போன வழக்கில், கைத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில், கயத்தாறு பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்(36), தாழையூத்து பகுதி ஆறுமுகம் (32),பொன்ராஜ்(45)  ஆகிய 3 பேரையும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்து நகை - பணத்தை மீட்டனர்.