தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி: செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரபா. இவர் கடந்த 21-ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் தனது மகள் ஹரிணியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ராஜூவ் நகர் 6-வது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kovilpatti
சிறுமியிடம் தங்க செயின் பறித்த திருடன் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
அடுத்த
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026