கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீவிபத்து:ஒருவர் படுகாயம் - பற்றி எரியும் தீ - 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்.





தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான ராமகிருஷ்ணா தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை செண்பக விநாயகமூர்த்தி மற்றும் சிராக் ஆகியோர் லீஸ்க்கு எடுத்து வருகிறது.  இன்று வழக்கம் போல தீப்பெட்டி ஆலையில் ஊழியர்கள் தீப்பெட்டி உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தபோது. திடீரென இயந்திரப் பகுதியில் தீப்பிடித்து மளமளவென எரிந்து பற்றி எறிய தொடங்கியது. இந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு மட்டும் சிறுகாயம் ஏற்பட்டது. உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக  தீப்பெட்டி ஆலையை விட்டு வெளியேறினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கோவில்பட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் மற்ற பகுதியிலிருந்து தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் மூலப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்திக்கான இயந்திரங்கள் ,  தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் கட்டிடம் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன.