கோவில்பட்டியில் அரசு மதுபான கடையில் பூட்டை உடைத்து 9 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்கள் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் அந்த கடையை இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டி விட்டு சென்ற நிலையில் காலையில் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 9 ஆயிரம் பணம் மற்றும் மதுபாட்டில்கள் மற்றும் அருகே இருந்த பாரில் ரூபாய் 3000 ரொக்க பணம் மற்றும் பாரில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருடிய மர்மநபர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் கையோடு கழட்டி எடுத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.