கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதல் - 4 பள்ளி குழந்தைகள் காயம்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவி;ல்பட்டியில் உள்ள நாடார் நடுநிலைபள்ளி வாகனம் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பல்கில் பெட்ரோல் போட்டு விட்டு பள்ளி வாகனம் மெயின் சாலைக்கு வந்த போது கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் மினிபேருந்து பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து வாகனத்தில் இருந்த 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீடு திரும்பினர். விபத்து குறித்து கிழக்குகாவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.