கோவில்பட்டியில் தன்னார்வத்துடன் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் தனியார் நிறுவன பாதுகாவலர்!
யாரு எக்கேடுகட்டா எனக்கென்ன அப்படின்னு சொல்வது போல், சாலையில் செல்வதற்கு தனக்கு வழி கிடைத்தால் போதும் என்பது போல் தற்போது உலகம் முழுவதும் உள்ள 75 % மனிதர்கள் சுயநலத்துடன் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே (திலகராஜ் பாயிண்ட் பகுதி) நகரின் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி மட்டுமின்றி அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதி காலை, மாலை போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாவலர் ஆறுமுக கண்ணன் என்பவர் தன்னார்வத்துடன் சாலையில் நின்று போக்குவரத்தினை சரி செய்து வருகிறார். இது ஒரிரு நாள் இல்லை பல நாள்களாக தன்னார்வத்துடன் இந்த பணியை செய்து வருவதாகவும், குறிப்பாக ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுவிட்டால் உடனடியாக எதுவும் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறதா? என்று பார்ப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி இருந்தால் அதனை சீர் செய்வார் என்று அப்பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர்.
பொது சேவை செய்வதற்கும் தன்னை அர்ப்பணிக்கும் ஒரு மனம் வேண்டும்....!