கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 இளைஞர்கள்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புறவழிச்சாலையில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக DSP ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். தனிப்படை போலீசார் அந்த 2 பேரையும் துரத்தி சென்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த 2 பேரிடமும் விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பரத் (20), லிங்கம்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) என்பதும், இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் மேற்கு போலீசாரிடம், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர்.