கோவில்பட்டியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த புது மாப்பிள்ளை?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியில் சேர்ந்த சின்னத்துரை மகன் மனோ (27), இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோகனபிரியா என்பவரிடம் திருமணமான நிலையில், இன்று காலை கோவில்பட்டி சிந்தாமணி நகர் தண்டவாளத்தில் மனோ காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து மனோவின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், மனோ தற்கொலை செய்து கொண்டார? அல்லது கொலையா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமண மான ஒரு மாதத்திலயே புது மாப்பிள்ளை உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.