தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மந்திதோப்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் கட்டுமான பணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து சண்முக சிகாமணி நகர் பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து பாண்டவர்மங்கலம் பகுதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார், பின்னர் கடலையூர் சாலை தங்கப்பன் நகரில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து மந்தித்தோப்பில் தமிழ் பாப்பிஸ்து பள்ளியில் அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Kovilpatti
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த MLA கடம்பூர் ராஜு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் - தேர்தல் பிரச்சாரம்!
அடுத்த
கூடுதல் மின்மாற்றி எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026