கோவில்பட்டியில் கனிமவளங்கள் கொள்ளை.* நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன்கோவில் மலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுவர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலை சுற்றியுள்ள குன்றுகளை வெடி பொருட்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடைத்து சரள்மண் உள்ளிட்ட கனிமவளங்களை லாரிகள் மூலம் கொள்ளையடித்துச்சென்ற கும்பலை கைது செய்ய வேண்டுமென கருத்துரிமை பாதுகாப்பு சார்பில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைத்தில் மனு கொடுக்கப்பட்டது.