கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் தொடர்ந்து கேரளா லாட்டரி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் தனிப்படையினர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் விசாரணை ஈடுபட்ட போது,கோவில்பட்டி நகைக்கடை பஜாரில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1வது தெருவை சேர்ந்த காளிதாஸ் (57)என்பவர் ஆன்லைன் மூலமாக கேரளா மாநில லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் காளிதாஸை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.5500 ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.