கோவில்பட்டியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ்நகர் பகுதியில் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரின் மகன் கணேசன் (31), அப்பகுதியில் சாலையில் வருபவர்களை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டலில் ஈடுபட்டது தெரியவந்தது, இதனை அடுத்து கணேசனை கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் அவரிடம் இருந்த அரிவாலை பறிமுதல் செய்தனர், மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணேசன் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைதாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.