கோவில்பட்டி அருகே பெட்ரோல் ஊற்றி  கொலை செய்த வழக்கில் மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை !



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடந்த 2019 - ம் ஆண்டு நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விபி சித்தன்நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் சுப்பையா (72/2019) என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக பெட்ரோல் ஊற்றி பற்றவைத்து கொலை செய்த வழக்கில் சுப்பையாவின் மகள் மூக்கம்மாள் (58/2025) என்பவரை நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  தாண்டவம் இன்று (01.12.2025) மேற்படி எதிரி முக்கமாள் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/-  அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய  காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.