கோவில்பட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திமுக நகர அலுவலகத்தை பார்வையிட்ட கனிமொழி எம்.பி !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட நகர திமுக அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28ந்தேதி மாலை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி புதிதாக கட்டப்பட்ட நகர திமுக அலுவலகம், அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலை மற்றும் நூலகத்தை பார்வையிட்டார்.
அப்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமார், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோவில்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ஜெய கண்ணன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர பொறுப்பாளர் (கிழக்கு ) சுரேஷ், வடக்கு மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் இந்துமதி கௌதமன், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.