கோவில்பட்டியில் நடந்த மாரத்தான் போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவன் முதலிடம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி உடற்கல்வியில் துறை சார்பில் காமராஜரின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு துவங்கி மாதாங் கோவில் ரோடு,எட்டையாபுரம் ரோடு,புது ரோடு,மெயின் ரோடு வழியாக 5கிலோமீட்டர் தூரம் எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் தலைமை வகித்தார்.
சங்க துணைத் தலைவர் செல்வராஜ்,செயலாளர் ஜெயபாலன்,பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.மாரத்தான் போட்டியை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் கருத்தபாண்டிக்கு ரொக்க பரிசு ரூ5000 மற்றும் சான்றிதழும், 2ம் இடம் பெற்ற பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி மாணவர் கனிராஜ்க்கு ரொக்க பரிசு ரூ 3000 மற்றும் சான்றிதழும், 3ம் இடம் பெற்ற பொள்ளாச்சி என்.ஜி.பி கல்லூரி மாணவர் கபிலனுக்கு ரொக்க பரிசு ரூ 200 மற்றும் சான்றிதழும், 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ500 மற்றும் சான்றிதழும் வழங்கி பேசினார். இதில் கலந்து கொண்ட 70 வயது முதியவர் கண்ணன், 65 வயது முதியவர் கிருபானந்தம் ஆகியோருக்கு சிறப்பு பரிசாக ரொக்கம் 500ம் சான்றிதழும் வழங்கப்பட்டது.இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி உறுப்பினர் அருண்,சரவணகுமார் முதல்வர் செல்வராஜ்,ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி பொருளாளர் ராஜா அமரேந்திரன், உறுப்பினர் தாயப்பன்,உடற் கல்வியில் துறை பேராசிரியர்கள் ரமேஷ் பாண்டியன்,சிவா,வெங்கடேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.கல்லூரி உடற்கல்விவியல் துறை தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.