கோவில்பட்டியில் கரும்பு இங்கே…ரொக்கப்பணம் எங்கே:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலமாக இன்று முதல் பொங்கல் பரிசு பொருள்கள் மற்றும் இலவச வேஷ்டி சோலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு பொருள்களுடன் ரொக்க பணம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ரொக்க பணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பொங்கல் பரிசு பொருள்களுடன் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், ரொக்க பணம் கொடுக்கமால் பொங்கல் பரிசு பொருள்களை தமிழக அரசு வழங்கியதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் திருக்கோவில் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காதில பூ அணிந்து, கையில் கரும்புகளுடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று ரூ.5000 ரொக்க பணம் வழங்க வலியுறுத்தி தேரடி கருப்பசாமி கோவிலில் கோரிக்கை மனுக்கள் அடங்கிய மாலையை வைத்து வழிப்பட்டனர். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்திற்கும் கோரிக்கை மனு மாலை அணிவித்து சூடம் ஏற்றி தோங்காய் வெடலை போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்;டத்தில் திரளான அக்கட்சியினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதில் மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ,மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி,மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ் எ கனி,
திருமுருகன், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்புராஜ் ,அய்யாதுரை,மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம், கோவில்பட்டி கிழக்கு வட்டாரத்தில் சுப்பையா , மாவட்ட எஸ்பி பிரிவுத் துறை பிரிவு சிங்கராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், கோவில்பட்டி மேற்கு வட்டார துணைத் தலைவர் கேசவன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், நகர துணைத் தலைவர்கள் தங்கபாண்டியன் வட்டாரசெயலாளர் தங்கராஜ் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.