கோவில்பட்டியில் EMA ராமச்சந்திரன் ரத்ததான கழகம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எம்.ஏ.ஆர் எத்தனை கழகம் மற்றும் நெல்லை வாசன் கண் மருத்துவமனை சார்பில் EMA ராமச்சந்திரன் அவர்கள் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. ஜவுளி கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கொண்டு கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை இ.எம்.ஏ.ஆர். ஜவுளி நிறுவனத்தின் மேலாளர் சங்கத் துவக்கி வைத்தார். வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர் ஜெயசீல கஸ்தூரி தலைமையில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.முகாமில் கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருத்துதல் போன்ற கண் பரிசோதனை செய்யப்பட்டது,இதில் வாசன் ஐ கேர் மார்க்கெட்டிங் மேலாளர் சூர்யா, இ எம் ஏ ஆர் ஜவுளி நிறுவன ஊழியர்கள் தங்கராஜ் சங்கிலி, பாண்டி முருகன், ஆகியோர் உடன் இருந்தனர்.