முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி!
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க - தமிழக முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூவிற்கு நன்றி தெரிவித்து நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணையர் T. ராஜீ தலைமையில் நடைபெற்றது,அதில் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக எம்.பரமசிவம்,செயலாளராக ஆர் கோபால்சாமி, பொருளாளராக ஜோசப் ரத்தினம், துணைத் தலைவர்களாக டி. ராஜு மற்றும் ஆர். எஸ் சுரேஷ் ,இணைச் செயலாளராக ஜி கதிரவன் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக எஸ் ரத்தினகுமார், வழி காட்டு தலைவராக ராஜேந்திரகுமார் பகடி, செயலாளராக முத்து சின்ன கொம்பையா,பொருளாளராக என் சித்திரஞ்சன்,துணை தலைவர்களாக மா. சுரேஷ் ,ரித்திக் ஜெயின் இணைச்செயலாளராக மகேந்திரன் , ஆர். ராகேஷ் அவர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தீப்பெட்டி நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியில் மத்திய,மாநில அமைச்சர் பெருமக்களை அழைத்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,அதற்கான செலவுகளை உறுப்பினர் மற்றும் மூலபொருள் விற்பனையாளர்களிடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கபட்டது.
முதற்கட்டமாக.உத்தர் பாரத் சேவா சங்கம் சார்பில் ரூபாய் 10 லட்சம் சங்கத்திற்க்கு நண்கொடை வழங்கப்பட்டது.
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தமிநாடு சட்டபேரவையில் தமிழ்நாடு முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் திறைவேற்றபட்டது.
புதிய, நிர்வாகிகளை சாத்தூர் சங்க தலைவர் லட்சுமணன்,சங்க நிறுவனர் ராஐவேல்,சாத்தூர் பெருமாள் சாமி
முன்னாள் தலைவர் சுரேஷ் முகேஷ் ஜெயின் எத்திராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இணைச்செயலாளார் கதிரவன் நன்றியுறையாற்றினார்.