கோவில்பட்டியில் மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த பிரியாதன் (82),இவரது மகன் பாலமுருகன், பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி கற்பகம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று அதிகாலை தந்தை பிரியாதனுக்கும் பாலமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இதில் ஆத்திரமடைந்த தந்தை பிரியாதன் மகன் பாலமுருகனை மண்வெட்டியை எடுத்து வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலமுருகனை கொலை செய்த தந்தை பிரியாதனை கைது செய்த கோவில்பட்டி போலீசார் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.