தலையில் முக்காடு போட்டு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், எட்டயபுரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உளுந்து, பாசி, மக்காச்சோளம், மிளகாய்,நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன, சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு முழுமையான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி  தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி இடம் தலையில் முக்காடு அணிந்தபடி மனு அளித்தனர்.

'