கோவில்பட்டியில் பயிர் காப்பீடு வழங்கக்கோரி  விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் விவசாயிகளுக்கு 2023-2024 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு பணத்தை உடனே வழங்க கோரியும், கோவில்பட்டி கோட்டம் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை, கோவில்பட்டி நகர வளர்ச்சி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவில்பட்டியை மாவட்ட தலைமை இடமாக அறிவித்து, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தின் வடபகுதி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவேங்கடம் ஆகிய தாலுகா பகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டியும், தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.