கோவில்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பரிதாபமாக  உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கான்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி (47), விவசாயியான இவர் வேலை பணி காரணமாக  கோவில்பட்டி விஜயாபுரி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அருணகிரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், அருணகிரி பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.