கோவில்பட்டியில் பெண் தொழில் முனைவோருக்கான பிரத்தியேக சங்கமம் நிகழ்ச்சி!


ஆதிசக்தி ஃபவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கோவில்பட்டி பைரவா மஹாலில் ஏப்ரல் 5ஆம் தேதி, பெண் தொழில் முனைவோருக்கான பிரத்தியேக சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில் ஆதிசக்தி ஃபவுண்டேஷனின் நிறுவனர்  சௌமியா திணேஷ் சமூகத்தில் பெண் தொழில்முனைவோர் கூட்டு முயற்ச்சிகளின் தேவைகளைப் பற்றியும், சுயத்தொழில் செய்து வரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பற்றி விளக்கி ஆதிசக்தி ஃபவுண்டேஷ்ன் மூலம் முத்ரா உள்ளிட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற்றுத் தருகிறோம் என்று உறுதியளித்தார்.



 Zoho நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மையின் இயக்குனரான ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பெண் தொழில் முனைவோருக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்;.



ரஃபேல் கிரியேடிவ் மற்றும் இயந்திரன் எட்ஜ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் காருண்யா குணவதி கலந்து கொண்டு இளம்பெண் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் தாமோதர கண்ணன்,செயலாளர் .ராஜமாணிக்கம் மற்றும் ரோட்டராக்ட் சேர்மன் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தினர்.


இந்தநிகழ்ச்சியை ஆதிசக்தி பஷண்டேஷனின் நிர்வாகிகளான ஷண்மதி,கஸ்தூரி பிரியா,ஹெலன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.


இந்தநிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெற்றிகரமாக தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் 300 க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களை ஊக்கபடுத்தும் விதமாக உணவு, கலை, இலக்கியம், சுகாதாரம் ,தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதித்து வரும் 20 பெண் தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தொழில் முனைவோர்களுக்கு அனைவருக்கும் Zoho நிறுவனத்தின் மென்பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.